முட்டைகோஸில் உள்ள வைட்டமின் கே மற்றும் அந்தோசயனின்கள் மன செயல்பாடு மற்றும் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது.
முட்டைக்கோஸ் மூளையை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் உணவுகளில் ஒன்றாகும். வைட்டமின் கே நரம்பு செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க முக்கியம் ஆகும்.
அவை எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
மேலும் முட்டைக்கோசு சாப்பிடுவது எலும்புப்புரை போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது. சிவப்பு முட்டைக்கோஸ் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆந்தோசயானின்களின் சிறந்த ஆதாரமாகும்.
முட்டைக்கோஸை தொடர்ந்து சாப்பிடுவது சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
சரி இனி முட்டைக்கோஸ் கொண்டு அசத்தலான முட்டைக்கோஸ் சாண்ட்விச் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு
தக்காளி சாஸ் - 4 டீஸ்பூன்
கோதுமை பிரட் துண்டுகள் - 8
வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க
செய்முறை :
முட்டைக்கோஸை மிகப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நீரில் கழுவிய பின்பு இதனோடு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இட்லி தட்டுகளில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயம், முட்டைகோஸ், தக்காளி சாஸ், சீரகத்தூள், சில்லி சாஸ் போட்டு சிறிது வெண்ணெய் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.
நீர் குளியல் உள்ள சிறப்புகள் !
ஒரு பிரட் துண்டின் நடுவில் இந்த கோஸ் கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டால் மூடி டோஸ்ட் செய்யவும். முட்டைக்கோஸ் சாண்ட்விச் ரெடி!