சத்து மிக்க கேரட் பால் அல்வா செய்வது எப்படி?





சத்து மிக்க கேரட் பால் அல்வா செய்வது எப்படி?

இனிப்பு என்று சொன்னாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு என்றால் அது அல்வா தான். 
சத்து மிக்க கேரட் பால் அல்வா செய்வது எப்படி?
அதை வீட்டில் செய்வது கடினமென்று பெரும்பாலும் பெண்கள் அதை செய்வதில்லை. கேரட்டுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கேரட் குளிர்காலத்தில் வளரும், அதன் காரணமாகவே இந்த பருவத்திற்கு ஏற்ற ஒரு இனிப்பு உணவாக திகழ்கிறது. 

குளிர்காலத்தில் குளிர் மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை காரணமாக நமது நோயெதிர்ப்பு அமைப்புகள் பாதிக்கப் படுகின்றன. கேரட் வைட்டமின் ஏ- வை பீட்டா கரோட்டின் வடிவத்தில் சேமிக்கிறது. 

இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்த்தொற்றுகள், அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கேரட் அல்வாவை தயாரிக்க பால், ஏலக்காய் மற்றும் பாதாம் ஆகிய பொருட்கள் தேவைப்படுகிறது. பசு அல்லது எருமை பாலில் வைட்டமின் டி, புரோபயாடிக்குகள் மற்றும் இம்யூனோகுளோபூலின் ஆகியவை உள்ளன. 

இது குளிர்காலத்தில் வைரஸ்களுக்கு எதிரான நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பால் குடிக்க மறுக்கும் குழந்தைகள் கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். 

அப்படியே அத்தியாவசிய ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ குழந்தைக்கு கிடைத்த மாதிரி இருக்கும். இந்த கேரட்-ஐ பயன்படுத்தி மிகமிக சுலபமாகவும், சத்தான முறையிலும் வீட்டிலேயே அல்வாவை செய்ய முடியும்.
தேவையானவை 

மசித்த கேரட் – ஒரு கப் 

பால் – ஒரு கப் 

சர்க்கரை – ஒரு கப் 

நெய் – 1/2 கப் 

முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் – 1/4 டீஸ்பூன் 

செய்முறை 
சத்து மிக்க கேரட் பால் அல்வா செய்வது எப்படி?
கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு போதுமானது. 
பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?
முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லா வற்றையும் இட்டு கிளற வேண்டும். 

கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும். பாத்திரத் தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும் போது இறக்கி வைத்து வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். 

இந்த கேரட் அல்வா விருந்தின் போது பரிமாற ஏற்றது.
Tags: