நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்துபோகாமல், ஆற்றல் தருவதால் தான் இதற்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது.
உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து என்பது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது.
பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் என்ன?
சுவை மட்டுமின்றி உளுத்தம் பருப்பில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
இந்த நார்ச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
உளுத்தம் பருப்பில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அவை அனைத்து விதமான தோல் எரிச்சலையும் குறைக்க உதவும். அதிக ஆக்ஸிஜனேற்ற ரத்தத்தை உங்கள் உடலுக்கு கொண்டு வருகிறது.
மேலும் இது பளிச் என்ற ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. உளுந்து உங்கள் உலர்ந்த மற்றும் உடையக்கூடிய தலை முடியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உங்கள் சுவையை தூண்டும் செட்டிநாடு வெள்ளை அப்பம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான செட்டிநாடு வெள்ளை அப்பம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க !
பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?
தேவையானவை
பச்சரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1 /2 கப்
சமையல் சோடா – சிறிது
உப்பு – தேவைக் கேற்ப
தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு ஆகிய வற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவுடன் உப்பு, தேங்காய்ப் பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பொரிப்ப தற்கு தேவை யான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும்.
அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளை யாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும். இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும்.
பின் எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும். அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.