பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால் இரத்தசோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம்.
பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன.
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால், தினமும் பேரீச்சம் பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பேரீச்சம்பழ கேக் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இன்று இந்த கேக் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் - 25 (விதை நீக்கப் பட்டது )
மைதா - 1 கப்
பால் - 3 /4 கப்
சர்க்கரை - 3 /4 கப்
சமையல் சோடா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 /2 கப்
அக்ரூட், முந்திரி - தேவையான அளவு.
செய்முறை :
பேரீச்சம் பழத்தை விதை நீக்கி விட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும்
அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டை யும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும்.
இறுதி யாக அக்ரூட், முந்திரி ஆகிய வற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும்.
மைக்ரோவேவ் ஓவன் 350 F ல் சூடு பண்ணவும்.
பின்னர் பேக்கிங் பானை வைத்து 350 Fஇல் 35 - 40 நிமிடங் களுக்கு பேக் செய்யவும்
சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.