மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?





மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?

நாம் சாப்பிடும் இறைச்சி உணவுகளில், பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு, கோழிக்கறி. குறைந்த விலை, குறைந்த கொழுப்பு காரணமாக கோழிக்கறி பிரபலமாகி உள்ளது. 
மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?
இவை தவிர, ஏராளமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இந்த இறைச்சியில் காணப்படுகின்றன. உடலுக்கு நன்மை செய்யும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளும் இதில் நிறைந்துள்ளன. 

இந்த கொழுப்புகள் இதய ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.கோழியின் தோலில் அதிக அளவு கொழுப்பு இருப்பதாக அறியப்படுகிறது. 

அதனால், கோழியை தோலுடன் சாப்பிடுவது நல்லதா அல்லது உணவை சமைப்பதற்கு முன்பு அதை நீக்க வேண்டுமா? கோழி தோலில் 32 சதவீதம் கொழுப்பு உள்ளது. 

அதாவது 100 கிராம் கோழித் தோலில், அதில் 32 கிராம் கொழுப்பு உள்ளது, என்று அர்ஜென்டினாவில் உள்ள இறைச்சி ஊட்டச்சத்து தகவல் மையத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மரியா டோலோரஸ் பெர்னாண்டஸ் பசோஸ் கூறினார்.

கோழி தோலில் உள்ள இந்த கொழுப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, நல்ல கொழுப்புகள் (unsaturated fats) என்று அறியப்படுபவை. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார்.

இந்த கொழுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு கெட்ட கொழுப்பு (saturated fat). இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.
கோழியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், கலோரிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கும் என்கிறார் நிபுணர். சரி இனி கோழி பயன்படுத்தி மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள் :

கோழிக்கறி – 1/2 கிலோ 

சாம்பார் வெங்காயம் – 200 கிராம் 

தக்காளி – 200 கிராம் 

மிளகாய் – 6 

கொத்த மல்லி இலை – 1/2 கட்டு 

புதினா – 1/2 கட்டு 

தேங்காய் துருவியது – 1/2 மூடி 

தயிர் – 1/2 குழிக்கரண்டி 

கசகசா – 1 டீஸ்பூன் 

உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப 

தாளிக்க சோம்பு – 1 டீஸ்பூன் 

பட்டை, லவங்கம் – தலா 2 
செய்முறை :
மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?
கோழிக் கறியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கொத்த மல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும். 

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் இவற்றை தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிக்கன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். 
அரைத்த தேங்காய், புதினா கொத்த மல்லி இலை விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும். சிக்கன் வெந்ததும், தயிரை ஊற்றி குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திரு ந்து இறக்கவும்.
Tags: