கர்நாடகத்தில் இந்த பதர் பேனி மிகவுல் பிரபலம். இன்று பதர் பேனியை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்,
எண்ணெய் - கால் கிலோ,
நெய் - 100 கிராம்,
பொடித்த சக்கரை - தேவையான அளவு,
பாதாம் பால் - தேவையான அளவு,
சோடா உப்பு, உப்பு - தலா ஒரு சிட்டிகை,
ரெடிமேட் பாதாம் மிக்ஸ், காய்ச்சிய பால் - தேவையான அளவு
பதர் செய்ய :
அரிசி மாவு - அரை கப்,
நெய் - கல் கப்.
செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
காய்ச்சிய பாலில் ரெடிமேட் பாதாம் மிக்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திர த்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு... இவற்றை 100 கிராம் நெய் சேர்த்து
சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திர த்தில் அரிசி மாவை கால் போட்டு அதனுடன் கால் கப் நெய் விட்டு பேஸ்ட் போல் ஆக்கவும்.
பிசைந்த மைதா மாவை சப்பாத்தி கல்லில் தோய்த்து 6 அப்பளமாக இட்டு,
ஒவ்வொரு அப்பளம் மீதும் அரிசி மாவு - நெய் கலவையை நன்கு பரவலாக பூசி அடுக்கி,
பாய் போல் சுருட்டி, 4 ஆக நறுக்கிக் கொள்ளவும்.
மீண்டும் இந்த மாவை லேசாக தேய்த்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்த வுடன் உருட்டி வைத்த வற்றை போட்டு சிவக்க பொரித் தெடுக்கவும்.
பரிமாறும் போது அதன் மேலே பொடித்த சக்கரை தூவி, கரைத்து பாதாம் மிக்ஸ் பாலை ஊற்றி பரிமாறவும்.
சூப்பரான பதர் பேனி ரெடி.