சுவையான கிரீன் ரெட் சாண்ட்விச் செய்வது எப்படி?





சுவையான கிரீன் ரெட் சாண்ட்விச் செய்வது எப்படி?

சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறுகிய நேரத்திலேயே ஒரு சத்தான உணவை செய்ய வேண்டும் என்றால் பலரின் சாய்ஸ் சாண்ட்விச்சாகத் தான் இருக்கிறது. 
சுவையான கிரீன் ரெட் சாண்ட்விச் செய்வது எப்படி?
சாண்ட்விச்சில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், மட்டன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், பன்னீர் சாண்ட்விச், மற்றும் மஷ்ரூம் சாண்ட்விச் பிரபலமானவை. 
இன்று இங்கு நாம் காண இருப்பது ஒரு வித்தியாசமான கிரீன் ரெட் சாண்ட்விச். 

இந்த பிரெட் சாண்ட்விச்சின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை வெறும் புதினா சட்னி, டொமெட்டோ சாஸ், மற்றும் வெண்ணெய்  கொண்டே சுலபமாக சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். 

மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இந்த பிரெட் சாண்ட்விச்சை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். 

அது மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ கொண்டு செல்ல இவை ஒரு அருமையான லஞ்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட.
தேவையானவை: 

பிரெட் ஸ்லைஸ்கள் - 10, 

புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன், 

டொமெட்டோ சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், 

வெண்ணெய் - தேவையான அளவு. 
செய்முறை: 
சுவையான கிரீன் ரெட் சாண்ட்விச் செய்வது எப்படி?
பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, 
அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி, அதன் மறு பக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ கொண்டு செல்ல இவை ஒரு அருமையான லஞ்ச்பாக்ஸ் ரெசிபி.
Tags: