முருங்கைக்கீரை என்றில்லை, எல்லா கீரைகளிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, அனைத்து வைட்டமின்கள், இரும்புச்சத்து என சத்துகள் அதிகம். அதற்காக அளவுக் கதிகமாகவும் எடுக்கக் கூடாது.
கீரைகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். கல்லீரல் ஆரோக்கியமாகும். சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாகும். கண் பார்வைக்கு நல்லது.
ஆனால், உணவு சகிப்புத் தன்மை இருப்பவர்களுக்கு இந்த உணவுகள் ஏற்றுக் கொள்ளாமல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். முருங்கைக்கீரைக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மை உண்டு.
அதையே அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவை வரலாம். வயிற்று உப்புசம் வரலாம். எதுக்களிக்கும் பிரச்னை ஏற்படலாம்.
தேவையானவை
உருளைக்கிழங்கு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கடலை மாவு – 1/2 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கறி மசாலா – 1/4 டீஸ்பூன்
லெட்டூஸ் இலை – 15
குழம்பிற்கு தேவையானவை
புளி – சிறு உருண்டை
தேங்காய் துருவல் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
பட்டை கிராம்பு – சிறிதளவு
உப்பு எண்ணெய் – தேவையான அளவு
தேனிலவு பயணத்தின் பொது விபத்து - மரணித்த இளம் பெண் !
செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு கட்டி இல்லாமல் மசிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கடலை மாவு, மிளகாய்த் தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.
லெட்டூஸ் கீரையை நடுவில் உள்ள காம்பை நீக்கி 2 துண்டு களாக்கவும் இந்த பாதி லெட்டூஸ் இலை மேல் மாவுக் கலவையை வைத்து ரோலாக சுருட்டி வைக்கவும்.
இப்படி மாவு அனைத்தை யும் லெட்டூசில் ரோல் செய்து இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பது போல அவித்து எடுக்கவும்.
புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காய், வெங்காயம், சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
தக்காளி சேர்த்து வதக்கவும், அரைத்த தேங்காய் மசாலாவை இத்துடன் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர், உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதி த்ததும் வேக வைத்த லெட்டூஸ் கீரை ரோலைப் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.