சூப்பரான மக்ரோனி குருமா செய்வது எப்படி? #Kuruma





சூப்பரான மக்ரோனி குருமா செய்வது எப்படி? #Kuruma

மேற்கத்திய நாடுகளில் பாஸ்தாவை கோதுமை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். சில இடங்களில் மைதா மாவை பயன்படுத்தி பாஸ்தா தயாரிக்கப் படுகிறது. இவை இரண்டுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. 
சூப்பரான மக்ரோனி குருமா செய்வது எப்படி?
கோதுமை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாஸ்தாவில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. உடலுக்கு தேவையான சக்தியை கோதுமை பாஸ்தா தருகிறது. 

மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பாஸ்தா உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் மைதா பாஸ்தா உடல் எடையை திகரிக்கச் செய்து விடும். 
இரத்தத்தில் சக்கரையின் அளவையும் அதிகரித்து விடும். ஆகையால் எந்த வகை பாஸ்தாவை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனம் வேண்டும். மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பாஸ்தா உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதில்லை. 

இன்னும் சொல்லப்போனால் மைதா பாஸ்தா உடல் எடையை எதிகாரிகச் செய்துவிடும். இரத்தத்தில் சக்கரையின் அளவையும் அதிகரித்து விடும். ஆகையால் எந்த வகை பாஸ்தாவை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனம் வேண்டும். 

ஆகவே நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சுவையான பாஸ்தாவை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. மைதா மாவினால் செய்யப்பட்ட பாஸ்தாவை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். 
தேவையானவை :

மக்ரோனி – 100 கிராம் 

தக்காளி – 1/4 கிலோ 

பெரிய வெங்காயம் – 2 

தனியா – 2 டீஸ்பூன் 

இஞ்சி – 1/2 அங்குலத் துண்டு 

பூண்டு – 6 பல் 

தேங்காய் துருவல் – 1 கப் 

கசகசா – 1 டேபிள் ஸ்பூன் 

கரம் மசாலாப் பொடி – 1 டீஸ்பூன் 

எண்ணெய் – தேவையான அளவு 

உப்பு – தேவையான அளவு 

கொத்த மல்லி, புதினா – சிறிதளவு 
செய்முறை :
மக்ரோனி குருமா
வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் 

இஞ்சி- பூண்டு, 2 பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும். ஆற வைத்து நைஸாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். 
வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங் களுக்கு மேல் கொதிக்க விடவும். இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும். சூடான சாதம் சப்பாத்தி, பூரியுடன் பரிமாற ஏற்றது. 

குறிப்பு
சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஷ் இது. எல்லா வற்றையும் நன்கு வதக்கி தயாரிப்ப தால் இந்த குருமா தனி சுவையுடன் இருக்கும். 
மக்ரோனி மசாலா மாதிரியும் தயாரித்துக் கொள்ளலாம்.
Tags: