மீன்கள் எப்போதுமே நல்லது தான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு. இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.
மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது.
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில்.
இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மலபார் மீன்குழம்பு அசைவ ரெசிபி
தேவையானவை
:
கடல் மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
அரைக்க
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தாளிக்க
சீரகம், கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
மீனைச் சுத்தம் செய்து துண்டு களாக்கவும். ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, தேவைக் கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் போது மீனை ஒவ்வொன்றாக எடுத்துப் போடவும். மீன் வெந்த பிறகு குழம்பை இறக்கி விடவும். மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.
குறிப்பு
இந்த கேரள மீன் குழம்பிற்கு தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா சேர்ப்பதால் தனி ருசி உண்டு.