வெயில் காலத்தில், பழங்களின் ராஜாவான மாம்பழத்தை நாம் பல விதமான வகைகளில் கடைகளில் காணலாம். ஒவ்வொரு மாங்காய்க்கும் தனியாக சுவை உள்ளது.
பழுத்த மாம்பழம் மட்டும் இல்லாமல் பச்சை மாங்காயும் கடைகளில் கிடைக்கும். பெரும்பாலும் பச்சை மாங்காய் ஊறுகாய் மற்றும் பச்சடி செய்ய பயன்படுத்தப்படும்.
இதன் சுவை புளிப்பு என்றாலும் இது உடலுக்கு பல நன்மைகள் தருகிறது. மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது.
இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாக குறையும்.
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்சினை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி விடும்.
மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகிறார், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும்.
மட்டன் குழம்பு, மட்டன் வறுவல், மட்டன் குருமா என எல்லாமே மட்டன் ஸ்பெஷல் களாக இருக்க, மட்டனுடன் மாங்காய் சேர்த்து தயாரிக்கும் மாங்காய் மட்டனோ இன்னும் ஸ்பெஷல். செய்து சுவைத்துத் தான் பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
கிளிமூக்கு மாங்காய் – 1 (சிறிய துண்டாக நறுக்கியது)
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சாம்பார் வெங்காயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
தேங்காய் – 1/2 மூடி துருவியது
சீரகம் – 1/2 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 4 பல்
லவங்கம் – 2
பட்டை – 2
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகிய வற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும்.
மாங்காய் வெந்ததும் வேக வைத்த மட்டன் மற்றும் மசாலாக்களை சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.மாங்காய், மட்டன் மசாலாவுடன் சேர்த்து வெந்து திக்கானதும் இறக்கவும்.
இப்போது மாங்காய் மட்டன் ரெடி.