சுவையான மட்டன் நீலகிரி குருமா செய்வது எப்படி? #Kuruma





சுவையான மட்டன் நீலகிரி குருமா செய்வது எப்படி? #Kuruma

நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், மட்டனை தொடவே கூடாது. 
மட்டன் நீலகிரி குருமா
ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என உடலுழைப்பில் உள்ளவர்கள் மாதம் ஒருமுறையாவது, ஓரளவு மட்டன் சாப்பிடலாம் என்கிறார்கள். 

மட்டன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஆட்டிறைச்சி குறித்து ஆய்வுகள் சொல்வது என்ன? வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ மட்டனை உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உடலுக்கு வலு கிடைக்கிறதாம். 
உடல் சூட்டினை தணிக்கும் தன்மை ஆட்டுக்கறிக்கு உள்ளதாம். தொடர்ந்து மட்டன் சாப்பிட்டு வருபவர்களுக்கு சரும பிரச்சனைகள் அவ்வளவாக வருவதில்லை. 

சருமத்துக்கான பளபளப்பு கூடுவதுடன், பார்வை கோளாறுகளும் நீங்குவதாக சொல்கிறார்கள். ஆட்டிறைச்சியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. 

இந்த வைட்டமின் B12 நியூரான்கள் மற்றும் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ருசியால் கட்டிப் போடும் சைடு டிஷ்களில் குருமாவும் ஒன்று. இந்த வாரம் நாம் நீலகிரி பாணியில் மட்டன் குருமா செய்யக் கற்றுக் கொள்வோம். 
பெண்களை தாக்கும் எலும்புருக்கி நோய் !
தேவையான பொருட்கள் 

மட்டன் – 200 கிராம் 

வெங்காயம் – 100 கிராம் 

தக்காளி – 100 கிராம் (நறுக்கியது) 

பட்டை – 2 கிராம் 

லவங்கம் – 2 கிராம், 

ஏலக்காய் – 2 கிராம் 

பச்சை மிளகாய் – 10 கிராம் 

சோம்பு – 5 கிராம் 

பூண்டு – 25 கிராம், 

இஞ்சி – 25 கிராம் 

மிளகாய்த் தூள் – 10 கிராம் 

தனியா – 15 கிராம் 

தேங்காய் – 1/2 மூடி 

கொத்த மல்லி – ஒரு கட்டு 

எண்ணெய் – 50 மில்லி 

உப்பு – தேவைக்கேற்ப 
அண்ணாச்சியின் கடைசி ஆசை - வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள் !
செய்முறை 

மட்டன் குருமா

இஞ்சி, பூண்டு, வெங்காய த்தை விழுதாக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், கொத்த மல்லி இவற்றை தனியே அரைக்கவும், மட்டனை சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைக்கவும். 
கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும். வெங்காய விழுதை வதக்கவும். தக்காளியை வதக்கி ஏனைய மசாலா பொருட் களை சேர்க்கவும். நன்கு `பிரை` செய்யவும். 

மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும். மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும். 

நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும். சாதம், தோசை க்குத் தொட்டுக் கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும். 
இதே முறைப்படி மட்டனு க்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன் படுத்தியும் குருமா செய்யலாம்.
Tags: