அசைவ உணவு எடுத்துக் கொள்கிறவர்கள் பெரும்பாலும் முட்டை, சிக்கன், சிவப்பு இறைச்சி, மீன் ஆகியவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான புரதத்தைப் பெறுகிறார்கள். ஆனால் சைவ உணவில் புரதத்தை தேடித்தேடி சாப்பிட வேண்டும்.
அதனால் தான் சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அதிகமாக புரதச்சத்து பற்றாக்குறையை சந்திக்கிறார்கள். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக சோயா பொருள்கள் இருக்கின்றன.
அந்த சோயாவிலும் தயாரிக்கப்படும் சோயா சங்க்ஸ் மூலம் ஓரளவு புரதத்தைப் பெற முடியும். புரதம் தவிர, சோயா துகள்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
கலோரி அளவுகளில் கொஞ்சம் கூடுதல் தான் என்பதால் கொஞ்சம் அளவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது. நிறைய பேருக்கு இந்த சோயா சங்க் எப்படி கிடைக்கிறது என்பதே தெரியாது.
சோயா சங்க்ஸ் என்பது சோயா மாவிலிருந்து சோயா பீன் எண்ணெயைப் பிரித்தெடுத்த பிறகு கிடைக்கப் பெறுவது தான் இந்த சோயா சங்க் என்னும் மீல் மேக்கர்.
தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் – 1 கப்
பட்டாணி – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி
பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
சீரக தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
உப்பு – 3/4 ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். மீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி யதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது !
பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்த மல்லி தூவி இறக்கவும். சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.