சுவையான நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்வது எப்படி? #Noodles





சுவையான நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்வது எப்படி? #Noodles

இன்றைய வேகமான உலகத்தில், எதற்குமே நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நபர்கள் ஜங்க் உணவுகளை நாடி செல்கின்றனர். 
சுவையான நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்வது எப்படி?
நேரமின்மையும், அளவுக்கு அதிகமான வேலை பளுவும் சேர்ந்து மேகி நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது. ஆம், 

பிறகு என்ன அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும் தானே. ஆனால் இவ்வளவு வேகமாக தயாராகும் உணவுக்கு கண்டிப்பாக ஜங்க் உணவு பட்டியலில் இடமுள்ளது. 
உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப் பட்டுள்ளது. 

அதாவது மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப் படுவதால் இதில் கொழுப்பு, கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இது சுலபமாக செரிமானமாகும் உணவல்ல. 

அதனால் ஜங்க் உணவான இது நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

இந்த நூடூல்ஸில், கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
உ.பியில் நடந்த ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இது ஒரு உப்பு ஆகும். உணவின் ருசியை அதிகரிக்க சேர்க்கிரார்கள். ஆனால் இதன் அளவு மிக மிக அதிகமாக நூடூல்ஸில் இருக்கிறதாம். 

அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.01 பிபிஎம் தான். ஆனால் மேகி நூடூல்ஸில் இது 17 பிபிஎம் ஆக உள்ளதாம்.
தோல் தொல்லையும் அதற்கான காரணமும் !
தேவையானவை: 

நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், 

வெங்காயம், கேரட் – தலா ஒன்று, 

பீன்ஸ் – 6, 

வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, 

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், 

டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், 

பூண்டு – 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), 

காய்ந்த மிளகாய் – ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 
நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்வது
வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண் டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும். 
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
வாணலி யில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ், டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… 

கடைசி யாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.
Tags: