முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப் படுவது கோழிக்கறி.
நாட்டுக்கோழிகள் இயற்கை உணவுகளும் தானியங்களும் கொண்டு வளர்க்கப்படுகிறது. இதில் புரதசத்து நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.
சூப்பரான நாட்டுக்கோழி கிரேவி செய்வது எப்படி? சரி இனி நாட்டுக்கோழி கொண்டு சூப்பரான நாட்டுக்கோழி கிரேவி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்த மல்லி - சிறிது
தண்ணீர் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1.
செய்முறை :
தக்காளி, வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக் கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி யதும் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி,
பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.
பிறகு அதில் நாட்டுக் கோழியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து கொத்த மல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான நாட்டுக் கோழி கிரேவி ரெடி!