சேமியா சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?





சேமியா சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, கோயில் சென்று வழிபாடு செய்து, பொங்கல் வைத்து, கரும்பு உண்டு மகிழ்வர். 
சேமியா சர்க்கரை பொங்கல்
வீடுகளில் வண்ண கோலமிட்டு பொங்கல் வைக்கப்படும். விவசாயத்திற்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். 
சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் (வெள்ளை பொங்கல்) வைத்து வழிபாடு செய்யப்படும். சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். 

சர்க்கரை பொங்கல் என்றாலே நீரிழிவு நோய், உடல் பருமன், இதய நோய் பிரச்சினைகள் உள்ளவர்கள் சாப்பிட பயப்படுவார்கள்.

சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. 

முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை. ஆனால் வித்தியாசமாக சேமியா சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். 

தங்க பஸ்பம் அல்லது தங்க பற்பம் என்றால் என்ன?

தேவையான பொருட்கள் : 

சேமியா - 1 கப், 

பாசிப் பருப்பு - அரை கப், 

வெல்லம் - ஒன்றரை கப், 

நெய் - அரை கப், 

முந்திரிப் பருப்பு - 20, 

திராட்சை - 20, 

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன். 

செய்முறை : 

பாசிப் பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெல்ல த்தை பொடித்து கொள்ளவும். ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். 

ஒரு கடாயில் பாதியளவு நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்த பின்னர் அதில் 2 கப் தண்ணீர் சேருங்கள். 

தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேக விடுங்கள். 
ஒரு பாத்திரத் தில் பொடித்த வெல்லத்தை போட்டு அதில் அரைகப் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டி அதை வெந்த சேமியாவில் சேருங்கள். 
அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கை விடாமல் கிளறுங்கள். கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

 தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல் ரெடி.
Tags: