பிரியாணி என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும்.
நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள்.
ஒரு சில பிரியாணி வகைகள் அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளின் மூலம் தனி ருசி ஏற்படுத்தப்பட்டு பிரபலமானவை.
சிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா?
கட்டுமானச் செலவுகளை சுருக்கி சிக்கனமாக வீடு கட்ட !
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/4 கிலோ
முந்திரிப் பருப்பு – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கியது)
தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
கசகசா – 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்
சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது - 20 கிராம்
கொத்த மல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது)
பால் – 100 மில்லி
கரம் மசாலா தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கோதுமை இனிப்பு கொழுக்கட்டை
செய்முறை:
பாலில் முந்திரிப் பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்க வும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய த்தைப் போட்டு பொன்னிற மாக வறுக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியை யும், மிளகாய் விழுதை யும் சேர்த்து வதக்கவும்.
இப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
சிக்கனில் தேவை யான உப்பு சேர்த்து சிக்கன் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பரிமாறும் முன்பாக கொத்த மல்லி இலை தூவி அலங் கரிக்கவும்.
இப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி.