தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு – 1 கப்,
கேரட் – ½ கப்,
பீட்ரூட் – ½ கப்,
முட்டைக் கோஸ் – ½ கப்,
பச்சைப் பட்டாணி – ½ கப்
பனீர் – 4 சிறிய துண்டுகள்,
கரம் மசாலா, மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவை யான அளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
(மேற்கண்ட காய்கறி களை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காய்கறிகள் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மாவு போல் பிசைந்து கொள் ளுங்கள்.
அதை சிறிய வட்டமாகத் தட்டி அதன் உள்ளே ஒரு பனீர் துண்டு வைத்து பந்தைப் போல் உருட்டி,
அதில் லாலிபாப் ஸ்டிக் வைத்து, சூடான எண்ணெ யில் பொரித்து எடுத்தால் வெஜிடபிள் லாலிபாப் தயார்.
இதில் எனர்ஜி – 137 Kcal, புரதம் – 1.8 கிராம், மாவுச் சத்து – 10.6 கிராம், கொழுப்பு சத்து – 12 கிராம் அளவில் அடங்கி யுள்ளது.