ரவா நாம் வெறுக்கும் ஒரு உணவாக இருந்தாலும் உண்மையில் ரவா நாம் அறியாத பல நன்மைகளைக் கொண்டுள்ளது. உண்மையில் சிறந்த காலை உணவு எதுவென்று நீங்கள் தேடினால் அது சந்தேகமே இல்லாமல் ரவை தான்.
ரவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ரவையில் செலினியம் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது இதயத்தை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். ரவை இதயத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்கும்.
நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !
இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவற்றை தடுக்கிறது. ரவை உங்களை நிறைவாக வைத்திருக்கிறது மற்றும் ஒருவர் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
சுருக்கமாக சொல்வதென்றால், இது குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. சரும அழகின் உச்சத்தை உணர்த்த, `கோதுமை நிறம்' என்பார்கள்.
அதிலும் பெண்களின் நிறத்தைக் கோதுமையோடு ஒப்பிட்டுப் பேசுவார்கள் கோதுமையில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளது. இதை தவிர்ப்பதால் அந்த சத்து குறைபாடு ஏற்படும்.
நம் உடலில் செல்கள் மற்றும் திசுக்களை சீரமைக்க வைட்டமின் பி மிகவும் அவசியமாகும்.பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த கோதுமை ரவா இனிப்பு பொங்கலை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
வெறும் வாணலியில், கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித் தனியாகப் போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும். வறுத்த ரவா, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
ஒரு பாத்திரத் தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பி லிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை திறந்து, வெந்த ரவா மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.