சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?





சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

சுற்று சூழல் மாறுதல் காரணமாக நோய் தொற்று ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைக்கு தினமும் காலை எழுந்தவுடன் 6 மிளகை சாப்பிட்டு பாருங்கள். 
சிக்கன் பெப்பர் ப்ரை
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்.

மிளகில் ஆன்டி பாக்டீரியல் சக்தி அதிக அளவு இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும். 
தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் திறன் நம் உடலுக்குள் நுழையும். இதனால் புதிதாக நம் உடலுக்குள் வரும் தொற்றுகளை எதிர்த்து போராடி நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும். 

மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.மிளகு ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

வயிறு சரியில்லாதவர்கள் மிளகு சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும்.

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ

மிளகு – 10

மிளகுத் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

வெங்காயம் – 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரை மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பிறகு அதில் மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து, பின் அதில் வெங்காய த்தைப் போட்டு பொன்னிற மாக வதக்க வேண்டும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை நாமும் வானில் பார்க்கலாம் !
பின் ஊற வைத்துள்ள சிக்கனை வாணலி யில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து, அதனை மூடி வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும். 

சிக்கனானது நன்கு வெந்து விட்டால், அதனை இறக்கி கொத்த மல்லி தூவினால் சிக்கன் பெப்பர் ப்ரை தயார்.
Tags: