உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
அதுவும் வீட்டில் பால் பவுடரும், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக எக்லெஸ் மல்டி கிரைன் பால் கேக் செய்யலாம். இந்த மில்க் கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது.
அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் பால் கேக்கை செய்யலாம். முக்கியமாக இந்த பால் கேக்கை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.
அந்த அளவில் ருசியாக இருக்கும். உங்களுக்கு எக்லெஸ் மல்டி கிரைன் பால் கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
எக்லெஸ் மல்டி கிரைன் பால் கேக் ரெசிபியின் எளிய செய்முறையை படித்து செய்து சுவைத்து எங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
மல்டி கிரைன் மாவு - 35 கிராம்
தினை, வரகு, குதிரை வாலி, சாமை கலந்தது)
கோதுமை மாவு- 30 கிராம்
வெண்ணெய் - 40 கிராம்
சர்க்கரை - 60 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
பால் - 40 மில்லி
பிஸ்தா அல்லது பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் - அரை டீஸ்பூன்
முந்திரி மற்றும் பாதாம் - தேவையான அளவு
கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !
செய்முறை:
மிதமான சூட்டில் அடுப்பை வைத்து வெண்ணெயை ஒரு நிமிடத்துக்கு மட்டும் உருக்கி எடுக்கவும்.
இதனுடன் பால் சேர்த்து, சூடு ஆறிய வுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். (வெண்ணெய் சூடாக இருக்கும் போது சர்க்கரையைச் சேர்க்கக் கூடாது.
சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி !
அப்படிச் சேர்த்தால் சர்க்கரை கெட்டியாகி விடும்). இதனுடன் சலித்து வைத்துள்ள மல்டி கிரைன் மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர்
மூன்றை யும் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும். இப்போது எசென்ஸை இதில் ஊற்றி விடவும்.
கேக் செய்யும் பாத்திர த்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரவ விடவும்.
அதன் மேல் கேக் மாவைக் கொட்ட வேண்டும். கேக் பாத்திர த்தை லேசாக தரையில் தட்டி சமன் படுத்த வேண்டும்.
வார்ம் மஷ்ரூம் சாலட் செய்வது !
இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் முந்திரி பாதாம் பருப்பு களைத் தூவி அழகுபடுத்திக் கொள்ள லாம்.
குறிப்பு:
குக்கருக்கு பதிலாக கேக் செய்வதற்கு, ‘மைக்ரோ வேவ் அவன்’ பயன்படுத்துபவர்கள் அவனை 180 டிகிரியில் 25 நிமிடங் களுக்கு வைத்தும் கேக் தயரிக்கலாம்...
சர்க்கரை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் மாவாக்கப்பட்ட பனங்கற்கண்டையும் கூட பயன்படுத்தலாம்.
கேக் தயாரிக்க மைதாவை விட இந்தச் சிறு தானியங் களைப் பயன்படுத்துவ தால் உடலில் அதிக கார்போ-ஹைட்ரேட் சேருவதைத் தவிர்க்கலாம்.
அத்துடன் இந்த சிறுதானிய கேக்குகள் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தும் நிறைந்தவை.