வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்தான். வெங்காயம் உரிக்கும் போது, நம்முடைய நமக்கு கண்ணீர் வருவதற்கு காரணமும் இந்த எண்ணெய் தான்.
உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றக் கூடியது இந்த சின்ன வெங்காயம். ருசிக்காக மட்டுமல்லாமல், உடல் உபாதைகளுக்கும் இந்த சின்ன வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.
காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளைக்கு அரை ஸ்பூன் சின்ன வெங்காய சாறு சாப்பிட்டு வந்தால், நம்முடைய நுரையீரல் பலப்படுமாம்.
நுரையீரலில் தங்கியிருக்கும் அழுக்குகள், கழிவுகள், நச்சுக்கள் வெளியேறி விடும். ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.
இதயத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது சின்ன வெங்காயம்.. நெஞ்சுவலி பிரச்சினை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும். ரத்தம் உறையும் பிரச்சினையும் சீராகும்.
உடல் எடை குறைய வேண்டுமானாலும், சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே நிறைய ஊட்டச்சத்து கிடைக்குமாம். காரணம், சின்ன வெங்காய சாறு கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடியது.. முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் நிறையவே உள்ளன.
உங்களுக்கு வீட்டு வெங்காய ஃப்ரைட் ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய ஃப்ரைட் ரைஸ் ரெசிபியின் செய்முறையை படித்து செய்து சுவைத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவைப்படும் பொருட்கள் :
பாஸீமதி அரிசி – 1 1/2 கோப்பை
வெங்காயம் சின்னது – 12
குடை மிளகாய் – 1
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
பச்சைக் கற்பூரம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயத் தாள் – 1
ஸோயா சாஸ் – 4
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி?
செய்முறை . :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கொதிக்கும் நீரை எடுத்துக் கொள்ளவும்
குடை மிளகாயைக் கீறி அதில் போடவும். சில நிமிடத்து க்குப் பின் அதை வெளியே எடுத்து விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
பின்னர், அதை வட்ட வட்ட வளையமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காய விடவும். காய்ந்த வுடன் வெங்காய த்தை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய வுடன் அதில் குட மிளகாய், பச்சைக் கற்பூரம், உப்பு
மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இதில் வடித்து வைக்கப் பட்டிருக்கும் சாதத்தைக் கொட்டவும்
இத்துடன் சோயா ஸாஸையும் போடவும்.
வெங்காயத் தாளையும் சற்றுப் பெரிதாக வெட்டிப் போடவும்
இப்படியே ஐந்து நிமிடங்கள் வரை கிளறி இறக்கி வைக்கவும்.