சுவையான பாகற்காய் பச்சடி செய்வது எப்படி?





சுவையான பாகற்காய் பச்சடி செய்வது எப்படி?

பாகற்காயில் இருக்கும், கசப்பு சுவை கருதி பெரும்பாலானோர், தங்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை, ஆனால் இதில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. 
சுவையான பாகற்காய் பச்சடி செய்வது எப்படி?
ஆம் இவற்றில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. 

அது மட்டுமல்ல, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. 

ஆனால் பாகற்காயை  குறிப்பிட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சிலர் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப குறிப்பிட்ட சிலர் பாகற்காயை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. 
பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. 

இது உங்கள் சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம். நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது சரி தான். 

ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மறுபுறம், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் தொடவே கூடாது. சரி இனி சுவையான பாகற்காய் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
என்னென்ன தேவை?

பாகற்காய் - 1 கப்

தடித்த தயிர் - 1 கப்

சிறிய வெங்காயம் - 5

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - சிறிது

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

அரைக்க...

தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1/4 தேக்கரண்டி
போர்ன் (PORN) பற்றிய அறிவியல் உண்மை நல்லதா - கெட்டதா?
செய்முறை:
பாகற்காய் பச்சடி
பாகற்காயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். 

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போடுங்கள். 

மிளகாய் வறுபட்டதும் பாகற்காயை சேருங்கள். நிதானமான தீயில் பாகற்காயை பத்து நிமிடம் வதக்குங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்குங்கள். 
நீரிழிவு நோயின் அறிகுறிகள்?
நன்கு வதங்கிய பிறகு புளிக் கரைசலை சேருங்கள். அத்துடன் உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கெட்டி யான பிறகு இறக்குங்கள். இஞ்சி, பூண்டு மணமும் இனிப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளும் சேர்ந்து ஒரு கலக்கல் சுவை தரும் பச்சடி இது.
Tags: