சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?





சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து  உண்ணலாம். 
சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப் படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். 
இந்தக் கீரை வயிற்று நோய்களையும்  குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். 

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும் போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. 

சரி இனி வெந்தயக்கீரை கொண்டு சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள் :
வஞ்சிரமீன் – 1/2 கிலோ

வெங்காயம் 200 கிராம்

தக்காளி – 350 கிராம்

பச்சை மிளகாய் – 2

மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்

தனியாத் தூள் 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள், சீரகத் தூள் தலா – 1/2 டீ ஸ்பூன்

உப்பு – ருசிக்கு தேவையான அளவு

வெந்தயக் கீரை சிறிய கட்டு – 1

புளி – எலுமிச்சை அளவு

தாளிக்க :

நல்லெண்ணை – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு, சீரகம், சோம்பு, மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 6 பெரிய பல்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

தேங்காய் பத்தை – 4 பத்தை

கொத்த மல்லி தழை – அரை கைப்பிடி

கடலுக்குள் நீர்வீழ்ச்சி இந்திய பெருங்கடலில் ஆபூர்வ காட்சி !

செய்முறை :
வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?
மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும். வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும். 

கோக் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !

தக்காளியை நைசாக அரைத்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும். 

அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், வெந்தயக்கீரை போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும். 
மசாலா எல்லாம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 

முட்டைகோஸ் தடுக்கும் குடல் புற்று நோய்?

கடைசியாக மீனையும், அரைத்த தேங்காயையும் சேர்த்து 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு பக்குவம் வந்தவுடன் கொத்து மல்லி தழை தூவி இறக்கவும். 

சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
Tags: