அருமையான பேரிச்சம்பழ கேக் செய்வது எப்படி?





அருமையான பேரிச்சம்பழ கேக் செய்வது எப்படி?

0
பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். 
பேரிச்சம் பழ கேக்
அதோடு ஊறவைத்த பாலிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெது வெதுப்பான பாலை குடிக்கும் போது நீடித்த இருமலை போக்க முடியும். 

இதற்கு பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும். இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. 

எனவே நீங்கள் 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும் போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்

மைதா - 2 கப்

முட்டை - 3

சர்க்கரை - 1 1/2 கப்

ஆயில் - 1 1/2 கப்

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்

பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும்.

மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். 
அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊற வைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்க வேண்டும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் பேக்கிங் பவுடர், வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பட்டை தூள் போட்டு மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

கலந்த கலவையை கேக் தட்டில் ஊற்றி ஓவனில் பேக் செய்யவும். 

ஓவனில் பேக் செய்யும் முன் முதலில் ஓவனை வெறுமனே சூடு செய்து, பிறகு கேக் தட்டில் மாவை ஊற்றி ஓவனில் வைத்த உடன் 160 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் என்ற அளவில் வைத்து விடவும். 

இந்த கேக் தயாராக குறைந்தது 35 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். ஓவனை பொறுத்து நேரம் மாறுபடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)