ஓட்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து, தாவர வேதிப்பொருட்கள் (PHYTOCHEMICALS) உள்ளிட்டவை, மனிதர்களின் உடல்நலனுக்கு ஏற்றவைகளாக உள்ளது மட்டுமல்லாது, ஓட்ஸை எளிதில் சமைக்கூடியதாக உள்ளது.
சிறிது காலம் முன்புவரை, அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த ஓட்ஸ், இன்று அனைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும், பல்வேறு வெரைட்டிகளுடன் நிறைந்து இருக்கின்றன.
ஓட்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கலானது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
கெட்ட கொழுப்பு கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது,
காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
முட்டையின் வெள்ளைக்கரு - 4
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி - 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெது வெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும்.
பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும்,
அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்ற வேண்டும்.
அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்த மல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி.