ஆரோக்கிய பலன்களை கணிப்பதற்கு முன்பாக சுவையின் அடிப்படையில் முட்டை எல்லோருக்கும் பிடித்தமானது. இறைச்சி உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கும் நபர்கள் கூட முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே சமயம் அறிவியல் கூற்றுப்படி முட்டை சைவம் என்பது வேறு கதை.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமான உணவுப் பொருளில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
அவித்த முட்டை, முட்டை பொறியல், ஆம்லெட், ஆஃப்பாயில், புல்ஃபாயில், முட்டை மாஸ் என்று வெவ்வேறு வெரைட்டியாக முட்டையை நாம் சுவைத்து வருகிறது.
தோராயமாக ஒரு முட்டையில் 72 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.
நம் தசைகளின் வளர்ச்சி மற்றும் சீரமைப்புக்கு ஏதுவான அமினோ அமிலங்கள் முட்டையில் உள்ளன. முட்டையில் விட்டமின் டி, பி12 மற்றும் ரிபோ ஃபிளேவின் போன்ற சத்துக்கள் உள்ளன.
நம் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும், ஒட்டு மொத்த இயக்கத்திற்கும் இது பலன் உள்ளதாக அமையும். மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கோலின் என்னும் சத்து இதில் உள்ளது.
சரி இனி முட்டை பயன்படுத்தி பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை :
தக்காளி – ஒன்று
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 1/4 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 மேசைக் கரண்டி
சீரகத் தூள் – 1/4 மேசைக் கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?முட்டை – 4
மிளகுத் தூள் – 1/4 மேசைக் கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பாதி அளவு வெங்காயம்,
பச்சை மிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெந்ததும் பருப்பில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
ஒரு முட்டையுடன் மீதமுள்ள வெங்காய த்தில் பாதி அளவைச் சேர்த்து, மிளகுத் தூள், உப்பு மற்றும் சிறிதளவு மல்லித் தழை சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு பவுலில் மற்றொரு முட்டையை அடித்து தனியாக வைக்கவும்.
தோசைக் கல்லில் நெய் விட்டு, வெங்காயம் கலந்த முட்டைக் கலவையை ஊற்றி வேக விட்டு எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள வெங்காயம் தாளித்து, குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பில் கொட்டவும்.
வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்க்கவும். பிறகு தனியாக அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, மூடி போட்டு சிம்மில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
சுவையும், மணமும் நிறைந்த பாசிப்பருப்பு பொரித்த முட்டை ரெடி.