கறி சுண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி?





கறி சுண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி?

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கீர்த்தி சிறிதாக இருந்தாலும் மூர்த்தி பெரிது என நிறைய பழமொழிகளை கேள்விப் பட்டிருப்போம். அதற்கேற்ப குட்டியாக இருக்கும் சுண்டைக்காயின் பயன்களும் அளப்பரியது.
கறி சுண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி?
சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க உதவி செய்யும். இந்த சுண்டைக்காயில் பினைல்கள், குளோரோஜெனின்கள் உள்ளவை. 

இவை இரைப்பையில் ஏற்படும் அழற்சி, கணையத்தில் ஏற்படும் புண்களை குறைக்கும். இந்த சுண்டைக்காயில் கிளைக்கோஸைடு என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிக அளவில் உள்ளது. 

இதனால் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் பார்த்துக் கொள்ளும். 
உயர் ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

நீர்க்கட்டி, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்யும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதயத்தையும் மண்ணீரலையும் பாதுகாக்கிறது. 

சுண்டைக்காயில் ஆண்டி வைரல் பண்புகள் இருப்பதால் காய்ச்சலையும் குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். சிறுநீரை பெருக்கும். 

ஆஸ்துமா நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். மூலத்தை கட்டுப்படுத்தும். மூல நோயால் ஏற்படும் ரத்தத்தை தடுக்கும்.
தேவையானவை

பிஞ்சு சுண்டைக்காய் – 1/2 கப்

துவரம் பருப்பு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 4

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

பெருங்காயத் தூள் – சிறிதளவு

எண்ணெய் – தாளிக்க
செய்முறை
கறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe !
துவரம் பருப்பை சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும். சுண்டைக் காயை இரண்டிரண்டாக நறுக்கவும். அல்லது அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

நன்கு வதங்கியதும் சுண்டைக் காயை சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி இரண்டு நிமிடம் வேக விடவும். சுண்டைக்காய் வெந்ததும், தக்காளி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பச்சடி ரெடி.
Tags: