வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப் படுத்துகிறது.
சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும்.
உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். டயட்டில் இருப்பவர்கள் காலையில் கோதுமை பிரட்டுடன் இந்த ஆம்லெட்டை யும் சேர்த்து சாப்பிடலாம். இப்போது இந்த மேத்தி ஆம்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை – 3
வெந்தயக்கீரை – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
ப.மிளகாய் – 1
சீரகம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை :
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
வெந்தயக்கீரை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளளவும். கடாயை அடுப்பில் வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெந்தயக் கீரையை போட்டு பாதியளவு வேகும் வரை வதக்கிய பின் இறக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, வதக்கிய பொருட்கள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டையை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட் ரெடி.