டேஸ்டியான ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி?





டேஸ்டியான ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி?

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான அமைப்பில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. 
டேஸ்டியான ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி?
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த காலை உணவாகும். 

சராசரி நபர் ஒருவர், நாளொன்றுக்கு 3 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் சாப்பிடலாம். அதுவே நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்றால் இதற்கு மேற்பட்ட அளவில் ஓட்ஸ் சாப்பிடலாம். 

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !

ஆனால், ஓட்ஸ் உணவைக் காலையில் சாப்பிட வேண்டும் அல்லது இரவு கடைசி உணவாகச் சாப்பிட வேண்டும். சரி இனி ஓட்ஸ் பயன்படுத்தி டேஸ்டியான ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி - 2 கப்

பச்சைப் பட்டாணி - 1/2 கைப்பிடி

கேரட் - சிறியது ஒன்று

காலிஃப்ளவர் - ஒரு சிறு பகுதி

சின்ன வெங்காயம் - ஐந்தாறு

தக்காளி - பாதி

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 2 பற்கள்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

கொத்துமல்லி இலை - ஒரு கொத்து

எலுமிச்சை சாறு - சிறிது

தாளிக்க:

எண்ணெய், கிராம்பு - 3,

பிரிஞ்சி இலை - 1,

சீரகம், கடலைப் பருப்பு, முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:
ஓட்ஸ் கிச்சடி
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும். வெங்காயம், தக்காளி, கேரட், காலி ஃப்ளவர் இவற்றை விருப்ப மான வடிவத்தில் நறுக்கிக் கொள்ள‌வும்.

இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். 
வதங்கியதும் வெங்காயம், தக்காளி, காய்கள், பட்டாணி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி விட்டு, 

ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றி விட்டு, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலக்கி விட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

கொதி வந்ததும், ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக் கொண்ட்டே விடாமல் கிண்டி விடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தி னால் கட்டி களில்லாமல் நன்றாக வரும்.

முழுவதையும் கொட்டிக் கிண்டிய பிறகு தீயைக் குறைத்து விட்டு இரண்டொரு தரம் கிளறிக் கொடுத்து, எலுமிச்சை சாறு விட்டு, கொத்து மல்லி தூவி இறக்கவும்.
இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார். தேங்காய் சட்னி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். உங்கள் விருப்பம் போல் காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம். 

அதே போல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம். சுவையான இந்த ஓட்ஸ் கிச்சடியின் சுவையை மேலும் அதிகரிக்க இதனுடன் ஒரு கப் தயிர் அருகில் வைத்து சுட சுட பரிமாறலாம்.
Tags: