ஓமம் கற்பூரவல்லி இலை சூப் செய்வது எப்படி?





ஓமம் கற்பூரவல்லி இலை சூப் செய்வது எப்படி?

மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், ஓமவல்லி இலையின் தேவையும் அதிகரித்துள்ளது.. அதுவும், ஓமவல்லி ரசம் ஒன்று போதும்.. நுரையீரலே பலப்பட்டு விடும் பாருங்க. 
ஓமம் கற்பூரவல்லி இலை சூப் செய்வது எப்படி?
அதே போல, சிறுநீரகங்களுக்கும் இந்த ஓமவல்லி இலை தரும் நன்மை என்ன தெரியுமா? ஓமவல்லி இலையை, கற்பூரவல்லி இலை என்றும் சொல்வார்கள்.. வைட்டமின் C, A, B6 த்துக்கள் நிறைந்துள்ளன. 

இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்றவையும் அடங்கி உள்ளன. இதனால், சருமத்துக்கும், கண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கின்றன. 

நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது..செரிமான பிரச்சனைக்கும், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்கும், மிகச்சிறந்த தீர்வாக அமைவது இந்த இலைகள். 
இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப் போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். 

இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும்.
என்னென்ன தேவை?

கற்பூரவல்லி இலை – 10,

ஓமம் – 2 டீஸ்பூன்,

சீரகம் – 2 டீஸ்பூன்,

தனியா – 2 டீஸ்பூன்,

மிளகு – 4 எண்ணிக்கை,

சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),

இஞ்சி – 1 துண்டு,

பூண்டு – 4 பல்,

சோம்பு – சிறிது (தேவைப் பட்டால்),

உப்பு – தேவைக்கு,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப் பட்டால்),

வெற்றிலை -4,

நெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓமம் கற்பூரவல்லி இலை சூப் செய்வது எப்படி?
கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத் தூள் வதக்கி,
நம்முடைய உணவே மருந்து தெரியுமா?
வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலை யுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.
Tags: