டேஸ்டியான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி?

பனீர் என்றாலே கடையில்தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் பனீர் செய்யலாம். 
பன்னீர் பிரியாணி செய்முறை
பாலில் எலுமிச்சை சாறு, வினிகர், மோர் அல்லது தயிர் போன்ற சிட்ரிக் அமில உணவுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை கலப்பதன் மூலம் பனீரை தயாரித்து விடலாம். 

பெரும்பாலும் வணிக ரீதியாக விற்கப்படும் பனீர் சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது. குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். 
இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கப்

நீர் – 1 1/2 கப்

பன்னீர் – 200 கிராம்

இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்

வெங்காயம் – 1

தக்காளி – 2

நெய் – தேவையான அளவு

தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தயிர் – கால் கப்

அரைக்க :

கொத்த மல்லித் தழை – 1 கப்

பச்சை மிளகாய் – 4

பட்டை – 1 சிறிய துண்டு

ஏலக்காய் – 4

கிராம்பு – 4

நட்சத்திர சோம்பு – 1

செய்முறை :
பன்னீர் பிரியாணி
தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். பன்னீரை சதுரமான துண்டுக ளாக வெட்டி கொள்ளவும். 

அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். எண்ணெயில் பன்னீர் துண்டு களைப் போட்டு பொன்னிற மாக பொரித்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த விழுதையும், தக்காளியை யும் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும். 

அடுத்து தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து அதில் பொரித்த பன்னீர் துண்டு களை சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து வரும் போது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அரிசி, கொத்தமல்லி தழை சேர்க்கவும். 

இப்போது குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும். சூப்பரான பன்னீர் பிரியாணி ரெடி. சூடான பன்னீர் பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.
Tags: