அருமையான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்படி?





அருமையான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்படி?

தயிரில் உள்ள அண்டி ஆக்ஸிடெண்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும் தயிர் சாப்பிடுவதால் நம் உடலில் கொலஜன் உற்பத்தி அதிகமாகி இளமை தோற்றத்தை தருகிறது. 
அருமையான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்படி?
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் உடலுக்கு தேவையான பல மினரல்கள் தயிரில் நிறைந்துள்ளது. இவை நம் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவை தருகின்றன. 

பொழுது சாய்ந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவது அந்த கப தோஷ சக்தியை இன்னும் அதிகரிக்கும், அதனால் இரவில் தயிர் சாப்பிடுபவர்களுக்கு சளி, மூக்கடைப்பு, இருமல் போன்றா பிரச்சனைகள் உண்டாகும். 
அதற்குக் காரணம் பழங்களில் உள்ள அமிலத் தன்மையாகும். தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். சரி இனி அருமையான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

தயிர் - 1 கப்

வேர்க்கடலை (பொடித்தது) - 1/2 கப்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூண்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வேர்க்கடலை தயிர் பச்சடி
அரை கப் வறுத்த வேர்க் கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப் பாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு சிறு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். 

கடைசியில் தேங்காய்த் துருவலையும் அத்துடன் போட்டு விழுதாக அரைத் தெடுக்கவும். தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலக்கவும். 

பின்னர் அதில் வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும். சிறு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். 
கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயத் தூள், மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகிய வற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும். 

கலந்த சாதம் மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags: