அருமையான பைனாப்பிள் பழம் பச்சடி செய்வது எப்படி?





அருமையான பைனாப்பிள் பழம் பச்சடி செய்வது எப்படி?

பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. 
அருமையான பைனாப்பிள் பழம் பச்சடி செய்வது எப்படி?
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் சத்தான பழங்கள் உள்ளூர் மார்கெட்டில் ஏராளமாக இருக்கின்றன. இதில் முக்கியமான ஒரு பழமாக இருக்கிறது அன்னாசிப்பழம். 

இந்த பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பிற சேர்மங்கள் உள்ளன. 

அன்னாசிப் பழங்களும் அதிலிருக்கும் கலவைகளும் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவது மற்றும் காயங்களில் இருந்து மீள்வது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
அன்னாசிப்பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது.

அன்னாசியில் உள்ள ப்ரோமிலைன் (bromelain) போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. 

ஏனென்றால் அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் அழற்சி எதிர்ப்பு அதாவது ஆன்டி-இன்ஃபளமேட்ரி பண்புகளை கொண்டுள்ளது. அன்னாசிப்பழங்களில் மாங்கனீஸ் நிறைந்து காணப்படுகிறது. 

இது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், எலும்பு சார்ந்த குறைபாடுகளை சரிசெய்யவும் உதவுகிறது. தோராயமாக 165 கிராம் சிங்கிள் கப் அன்னாசி பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 76% மாங்கனீஸ் உள்ளது.

சரி இனி அருமையான அருமையான பைனாப்பிள் பழம் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

என்னென்ன தேவை?

பைனாப்பிள் - 1,

நேந்திரம்பழம் - 3,

மஞ்சள் தூள் - 1/2 மேசைக் கரண்டி,

மிளகாய்த் தூள் - 1 மேசைக் கரண்டி,

தண்ணீர் - 1 டம்ளர்,

தேங்காய் - அரை மூடி துருவியது,

கடுகு - 1/4 மேசைக் கரண்டி,

காய்ந்த மிளகாய் - 3,

கறிவேப்பிலை,

தேங்காய் எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,

தயிர் - 3 மேசைக் கரண்டி.
சிறு நீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !
எப்படிச் செய்வது?
அருமையான பைனாப்பிள் பழப் பச்சடி செய்வது எப்படி?
பைனாப்பிள் மற்றும் நேந்திரப் பழத்தை சின்னச் சின்ன துண்டுக ளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

மிக்சியில் தேங்காய்த் துருவல் மற்றும் கடுகு சேர்த்து நன்கு அரைத்து அதனை வேக வைத்துள்ள பழத்துடன் சேர்த்து ஒரு கொதி விடவும்.
பொதுவான கண் பிரச்சனைகளும் சிகிச்சைகளும் !
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பச்சடியில் சேர்க்கவும். கடைசியில் தயிர் சேர்த்து நன்கு கலந்து செய்து பரிமாறவும்.
Tags: