கேழ்வரகு சேமியா வெஜ் பிரியாணி செய்வது எப்படி?





கேழ்வரகு சேமியா வெஜ் பிரியாணி செய்வது எப்படி?

சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும்.  ரத்த சோகை, உடல் பருமன், தூக்கப் பிரச்சினைகள், பதற்றம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கிய உணவாகும். 
கேழ்வரகு சேமியா வெஜ் பிரியாணி செய்வது எப்படி?
கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. 

இது ரத்தில் உள்ள சர்க்கரை சிறப்பாக கட்டுபடுத்தும். அதாவது, குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ்  (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. 

ஆரோக்கியமாக இருக்க, பெரும்பாலானோர் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாக பார்லி மாவு, தினை மாவு அல்லது ராகி மாவையே பயன்படுத்துகின்றனர். 
கேழ்வரகை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், சிறுகுடலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உடல நல பிரச்சனைகள் ஏற்படலாம்.

உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு சேமியா வெஜ் பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு சேமியா வெஜ் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையானவை

பிரிஞ்சி இலை - ஒன்று,

பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,

பூண்டு - 6 பல்,

ஏலக்காய் - 2,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 3

சோம்பு - அரை டீஸ்பூன்,

பட்டை - சிறிய துண்டு,

கேரட் - 1

பச்சைப் பட்டாணி - 50 கிராம்,

கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - சிறிதளவு

பீன்ஸ் - 10

தக்காளி - ஒன்று

ராகி சேமியா - ஒரு கப்,

செய்முறை :
முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ள வேண்டும் .

பின் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும் . 

பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் வதக்கவும். 
பிறகு காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத் தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவேண்டும் .

இப்பொழுது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த வுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்
Tags: