அருமையான சாமை அரிசி உப்புமா செய்வது எப்படி? #Uppuma





அருமையான சாமை அரிசி உப்புமா செய்வது எப்படி? #Uppuma

ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியது. Panicum sumatrense அல்லது Little millet என்று அழைக்ககூடிய இவை அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாக இருக்கும். 
அருமையான சாமை அரிசி உப்புமா செய்வது எப்படி?
சைவ உணவு எடுப்பவர்களுக்கு புரதம் நிறைந்த இதை தினசரி ஒரு வேளையேனும் எடுக்கலாம். சாமை எளிதாக ஜீரணிக்க கூடியவை. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப கூடும். 

கார்போ ஹைட்ரேட் அதிகம் என்றாலும் இது எளிய சர்க்கரை கொண்ட கார்போ ஹைட்ரேட் உணவும் கூட. இதில் வைட்டமின் பி, வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
சர்க்கரை நோய் இன்று பெரும்பாலோரை ஆக்கிரமித்துள்ளது. எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது அவசியம்.

சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமையை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. 

இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் செய்கிறது. ஆராய்ச்சியின் படி சிறிய தினை செதில்கள் கூட 52.11 என்னும் மிதமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. 

நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது.
காலை, மாலை, இரவு நேரங்களில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சாமை அரிசியில் உப்புமா செய்து சாப்பிடலாம். சரி இனி சாமை அரிசி பயன்படுத்தி அருமையான சாமை அரிசி உப்புமா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள் : 

சாமை அரிசி – ஒரு கப் 

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் 

கடுகு – அரை டீஸ்பூன் 

கேரட் – 1 கடலை 

பருப்பு – ஒரு டீஸ்பூன் 

உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் 

வெங்காயம் – ஒன்று 

பச்சை மிளகாய் – ஒன்று 

உப்பு – தேவைகேற்ப 

கறிவேப்பில்லை – சிறிதளவு. 

செய்முறை : 
கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆற விடவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும். 
வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும். சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.
Tags: