சுவையான மூவர்ண கேக் செய்வது எப்படி?





சுவையான மூவர்ண கேக் செய்வது எப்படி?

0
உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், 
மூவர்ண கேக் செய்முறை
ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் பால் பவுடரும், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மூவர்ண கேக் செய்யலாம்.

இந்த மூவர்ண கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் பால் கேக்கை செய்யலாம். 
முக்கியமாக இந்த பால் கேக்கை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 

அந்த அளவில் ருசியாக இருக்கும். உங்களுக்கு மூவர்ண கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையானவை:

மைதா மாவு – 250 கிராம்,

சர்க்கரை – 250 கிராம்,

கேசரி பவுடர் – சிறிதளவு,

சாக்லேட் பார் – 4 (அல்லது பூஸ்ட் அல்லது போர்ன்விடா பவுடர் – 4 டீஸ்பூன்),

நெய் – 100 மில்லி.

செய்முறை:
மைதா மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். மைதா மாவை மூன்று பங்காக பிரிக்கவும். சர்க்கரை பாகையும் மூன்று பங்காக பிரித்து… 

ஒரு பங்கு மைதாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகை சேர்த்துக் கலக்கி, சாக்லேட்டை கரைத்து விட்டு கிளறி, கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
இதய இயக்கமும் இரத்த ஓட்டமும்.. விளக்கமாக அறிய !
மீண்டும் ஒரு பங்கு மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகு, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

மிகுந்த ஒரு பகுதி மாவுடன் மீதி சர்க்கரை பாகு சேர்த்துக் கிளறி (கலர் சேர்க்க வேண்டாம்) கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். ஆரஞ்சு, பிரவுன், வெள்ளை என்று மூன்று கலரில் பார்க்க அழகாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)