வெஜிடபிள் ரவா இட்லி செய்வது எப்படி?





வெஜிடபிள் ரவா இட்லி செய்வது எப்படி?

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 
வெஜிடபிள் ரவா இட்லி
அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
தினம் ஒரு கப் வெள்ளை பட்டாணி சாப்பிட்டா நீரிழிவு வராதாம். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக் கூடியது பச்சைப் பட்டாணி. 

எனவே, தினமும் மருந்து போல் ஒரு கைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். 

இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. கடையில் விற்கும் ரெடிமேட் இட்லி மிக்ஸ் வாங்கி ரவா இட்லி தயாரிப்பதை விட, வீட்டிலேயே காய்கறிகள் சேர்த்து ரவா இட்லி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பம்பாய் ரவை - 1 டம்ளர்

தயிர் - 2 டம்ளர்

நறுக்கிய கேரட், பட்டாணி - 1 கப்

சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்

பச்சை மிளகாய் - 1

கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 5

நெய் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நன்கு சிவக்க வறுத்து, ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு தாளித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள் சேர்க்கவும்.

இந்த கலவையை வதக்கி, வறுத்த ரவையில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு நெய் ஒரு டீஸ்பூன் விட்டு தயிர் 2 டம்ளர் சேர்த்து ரவா இட்லி மாவு கலவை தயார் செய்து கொள்ளவும்.

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

தேவைப்பட்டால் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, சிறிது கொத்த மல்லி இலை போட்டு அதன் மேல் ரவை கலவையை ஊற்றி ரவா இட்லிகள் தயாரிக்கவும்.

(கேரட், பட்டாணி தவிர வேறு காய்கறிகள் சேர்க்கத் தேவை யில்லை.) தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையோ சுவை.
Tags: