சுண்டைக்காய் வத்தலாக சாப்பிடுவதை விட அதை பச்சையாக குழம்பு வைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெற முடியும்.
எனவே அதை உடனே சரி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். அந்த வகையின் சுண்டைக்காய் உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது.
எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட வேண்டும். உங்களுக்கு செரிமானமின்மை, வயிற்று மந்தம், வயிற்றுக் கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் இருக்கின்றன எனில் அதற்கு சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும்.
தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப்,
பிஞ்சு சுண்டைக்காய் – ஒரு கப்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
பூண்டு – 5 பல்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள:
துருவிய தேங்காய் – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
நறுக்கிய புதினா, கொத்த மல்லித் தழை (சேர்த்து) – அரை கப்,
தக்காளி – ஒன்று,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு.
வறுத்துப் பொடிக்க:
பிரிஞ்சி இலை – ஒன்று,
சோம்பு, ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்ந்து – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக் காய்களை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அரை கப் நீர் விட்டு வேக விடவும்.
வெந்து, பச்சை வாசனை போனதும், சுருள வதக்கி… வறுத் துப் பொடித்த பொடி சேர்த்து இறக்கவும். இதில் வெந்த சாதத்தை போட்டுக் குழைந்து விடாமல் கிளறி, பரிமாறவும்.
குறிப்பு:
விருப்பப் பட்டால் சுண்டைக்காயை இரண்டாகவும் நறுக்கி வதக்கி, வேக வைக்கலாம். வயிற்றுப் பூச்சி மற்றும் குடற் பூச்சிகளை ஒழிக்கும் குணம் சுண்டைக் காயிடம் உண்டு.