காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ் செய்வது எப்படி? #Noodles





காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ் செய்வது எப்படி? #Noodles

சிறந்த உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் பேபி கார்னில் அடங்கி இருக்கின்றன. குறிப்பாக பேபி கார்னில் தியாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்ற பி வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. 
காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ்
இதிலிருக்கும் இந்த பி வைட்டமின்கள் நம்முடைய ஆற்றல் உற்பத்தியை ஆதரிக்கின்றன. மேலும் நரம்பு மண்டலம் சரியாக செயல்படவும், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர் அவ்னி கவுல் குறிப்பிட்டுள்ளார். 
வைட்டமின்ஸ்களை தவிர பேபி கார்னில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய மினரல்ஸ் உள்ளன. 

ஆரோக்கியமான ரத்த அணுக்களை பராமரிக்க மற்றும் இதய செயல்பாட்டை ஒழுங்குபடுத்த இந்த மினரல்ஸ்கள் அவசியமானவை. 

நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் இருந்தால் குறைவான கலோரி நுகர்வில் கவனம் செலுத்த வேண்டும். எடை குறைக்கும் உணவுகளின் ஒரு பகுதியாக உங்களது டயட்டில் பேபி கார்னை சேர்த்து கொள்ளலாம். 

ஏனென்றால் இதில் குறைவான கலோரியே உள்ளது. மேலும் பேபி கார்னில் நிறைந்திருக்கும் அதிக ஃபைபர் அதாவது நார்ச்சத்து சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. 
இதனை சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய திருப்தி உணர்வு ஏற்படும். எனவே அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும், எடை இழப்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவோருக்கும் பேபி கார்ன் சிறந்த தேர்வாக இருக்கும்.

நூடுல்ஸ் என்றாலே தனிச்சுவை தான். காப்ஸிகம் பேபி கார்ன் நூடுல்ஸ் ஒரு வித்தியாச மான சுவையுடன் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
தேவையானவை

சைனீஸ் நூடுல்ஸ் – 2 பாக்கெட்

காரட், காப்சிகம், பேபி கார்ன் – 2 கப் (நீள வாக்கில் நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

அஜினமோட்டா – 1/4 டீஸ்பூன்

வெள்ளை மிளகு பவுடர் – 1/4 டீஸ்பூன்

சோள மாவு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

சைனீஸ் நூடுல்ஸை சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வதக்கவும்.

அத்துடன் காய்கறி கலவையை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது, மிளகு பவுடர், சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அஜினாமோட்டா, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். 

அத்துடன் வேக வைத்த நூடுல்சை சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு :

கடையில் விற்கும் ரெடிமேட் மசாலா நூடுல்ஸ் பாக்கெட் என்றால் நறுக்கிய காய்கறி, வெங்காயம், பச்சை மிளகா யுடன், மசாலா பவுடரை சேர்த்து நெய் விட்டு வதக்கி, வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்துக் கிளறவும். 

இதற்கு அஜினமோட்டோ சேர்க்கத் தேவையில்லை.
Tags: