சுவையான கேரட் கேக் செய்வது எப்படி?





சுவையான கேரட் கேக் செய்வது எப்படி?

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும்.
கேரட் கேக்
உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. 

கோடை காலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. 
தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும். தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. 

புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது. கேரட்டை பயன்படுத்தி கோடை காலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.

என்னென்ன தேவை?

மைதா – 250 கிராம்,

பொடித்த சர்க்கரை – 200 கிராம்,

சிறிய சைஸ் முட்டை – 5,

எண்ணெய் – 150 மி.லி.,

வெனிலா எசென்ஸ் – 1,

உப்பு – 1/2 டீஸ்பூன்,

காய்ந்த திராட்சை – 100 கிராம்,

துருவிய கேரட் – 200 கிராம்,

பொடியாக நறுக்கிய வால்நட்ஸ் – 50 கிராம்,

பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

ஐசிங் சுகர் – 200 கிராம்,

பால் – 2 டீஸ்பூன்.

ஐசிங் சுகரில் பால் கலந்து, கெட்டியான இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். ஐசிங் டாப்பிங் ரெடி.

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, எண்ணெய், எசென்ஸ் சேர்த்து வெளிர் மஞ்சள் நிறம் வரும் வரை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.

இத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், பட்டைத் தூள், வால்நட்ஸ், உப்பு சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டி யில்லாமல் நன்கு கலந்து, 
கேரட், காய்ந்த திராட்சையை சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய கேக் டின்னில் ஊற்றி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 40-50 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். 

ஆறியதும் ஐசிங் சுகர் கலவையை அதன் மேல் ஊற்றி, செட் ஆனதும் பரிமாறவும்.
Tags: