வெண்டைக்காயில் வைட்டமின் A, C, E, K, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கால்சியம், இரும்புசத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமாக, நார்ச்சத்தும், பைட்டோ கெமிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.
இந்த நார்ச்சத்துக்கள், சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கணையத்தின் பீட்டா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் தூண்டுகோலாகிறது. அத்துடன் அதிக கலோரிகளை உட்கொள்வதையும் தடுத்து நிறுத்துகிறது.
ரத்த சோகை, கொலஸ்ட்ராலுக்கு வெண்டைக்காய் தீர்வை தருகிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது. வயிற்றுப்புண்களை ஆற்றுகிறது.
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியமான போலிக் அமிலம், வெண்டைக்காயில் நிறைய உள்ளது. வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், பிஞ்சு வெண்டைக்காயை வேக வைத்து எடுத்த தண்ணீருடன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் குணமாகும்.
பச்சையாகவே மென்று சாப்பிட்டால் பற்கள், ஈறுகளுக்கு நல்லது. கண்பார்வை கூர்மையாகும். நீரிழிவு நோய்க்கு சிகிச்சை யளிப்பதற்கு, மெட்ஃபோர்மின் மிக முக்கியமான தேவையாகும்.
எனவே, ஒரு சர்க்கரை நோயாளி, வெண்டைக்காயை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால், காய்கறியின் நீரிழிவு எதிர்ப்பு விளைவு மருந்தின் விளைவுகளை குறைக்கலாம்.
ரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வெண்டை உதவுகிறது.. இந்த நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது.
அதனால தான், வறுத்த வெண்டைக்காயின் விதைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
தேவையானவை:
வெண்டைக்காய் – கால் கிலோ,
வெல்லம் – 50 கிராம்,
புளி – சுண்டைக்காய் அளவு,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லை களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். விருப்பப் பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.
குறிப்பு:
வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.