அருமையான ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா செய்வது எப்படி? #Uppuma





அருமையான ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா செய்வது எப்படி? #Uppuma

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்தப் பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. 
அருமையான ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா செய்வது எப்படி?
காலிஃப்ளவர் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

காலிஃப்ளவரரில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.
இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள்  தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும். 

காலிஃப்ளவர் மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்கும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

உங்களுக்கு அலர்ஜி இருந்தால் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காலிஃபிளவர் அதிகம் சாப்பிடக்கூடாது. 

ஏனெனில் காலிஃபிளவரில் உள்ள கந்தகம் பால் மூலம் குழந்தைக்கு சென்றடைகிறது. அந்த குழந்தைகளுக்கு வாய்வு, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.
தேவையானவை:

ஓட்ஸ் – ஒரு கப்,

பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 2,

கடுகு, உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு,

பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு !
செய்முறை:
ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா
பெரிய வெங்காய த்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து… 

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்த மல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும்.
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
Tags: