குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசலைக்கீரையை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபொலிக் சத்து உள்ளதால், மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
மேலும் பசலை கீரையில் நிறைவான ப்ளவனாய்டு நிரம்பியிருப்பதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. நிறைய ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கீரை என்பதால், இதை உணவில் தவிர்க்கவே கூடாது.
குழந்தைகளுக்கு உணவில் இதை அடிக்கடி சேர்த்து தர வேண்டுமாம்.. சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் K சத்தும், அதிகம் உள்ளதால், எலும்புகளையும் பற்களையும் வலிமைபடுத்த செய்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு இந்த பசலைக்கீரையை காரம் அவ்வளவாக இல்லாத குழம்பாகவோ, அல்லது சூப் போன்றோ தந்தால், எலும்பும், பற்களும் உறுதிப்படும். பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும்.
அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது.
இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன் கீரை என்றும் அழைப்பர். அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது.
சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. இந்த பசலைக் கீரையை தோசையில் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 200 கிராம்
பசலைக் கீரை – அரை கட்டு
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பசலைக் கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பசலைக் கீரை, சிறிது உப்பு (கீரைக்கு மட்டும்) சேர்த்து பாதியளவு வெந்ததும் இறக்கவும்.
இவை அனைத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றி சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
சுவையான சத்தான பசலைக் கீரை தோசை ரெடி