உடல் ஆரோக்கியத்துக்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம்.
ஊற வைத்து சாப்பிடுவதால் பாதாமில் உள்ள சில நச்சுத்தன்மைகள் நீங்கி விடும்.
பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான். ஊற வைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும்.
ஊற வைத்த பாதாம், ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில், சருமத்தில் ஒரு என்சைம் தடுப்பான் இருப்பதால், அது உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறையை பாதிக்கும்.
இந்த ஊற வைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. பாதாமை வைத்து ஆரோக்கியமான சத்தான சுவையான சூப் செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையானவை:
பாதாம் – 50 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
செலரி, பாஸில் இலை – சிறிதளவு,
காய்கறி வேக வைத்த தண்ணீர் – அரை லிட்டர்,
பால் – ஒரு கப்,
பாதாம் – சிறிதளவு,
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லா வற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத் தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும் போது பால் சேர்க்கவும்.
இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.