வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.
சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.
நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.
சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு துண்டு,
துவரம் பருப்பு – 50 கிராம்,
முள்ளங்கி – 2,
சின்ன வெங் காயம் – 4,
மஞ்சள் தூள்- சிறிதளவு,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
நறுக்கிய கொத்த மல்லித் தழை – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக் கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – ஒன்று,
தனியா – 3 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
துவரம் பருப்பை குழைய வேக விடவும். புளியைக் கரைத்து… உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். வாழைத் தண்டை நார் நீக்கி வில்லைகளாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும்.
பாதி வெந்ததும், நறுக்கிய முள்ளங்கியை யும், சின்ன வெங்காயத் தையும் வதக்கி சேர்க்கவும். காய்கள் வெந்ததும், வெந்த துவரம் பருப்பை சேர்த்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத் துள்ளவற்றை வறுத்துப் பொடித்துச் சேர்த்து…
கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள வற்றைத் தாளித்துக் கொட்டி, கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.