சூப்பரான பேரிச்சம்பழ கேசரி செய்வது எப்படி? #Kesari





சூப்பரான பேரிச்சம்பழ கேசரி செய்வது எப்படி? #Kesari

0
வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். 
சூப்பரான பேரிச்சம்பழ கேசரி செய்வது எப்படி?
குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். 

இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். 
எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். 

மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். 

இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும். குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு இதன் பாதிப்பு மேலும் அதிகமாகும். 

பேரீச்சம் பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.
உடலில் வெப்பநிலை குளிர் காலங்களில் குறைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். 

மேலும் இதை காலை மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.
தேவையான பொருள்கள் !

பேரீச்சம் பழம் -10

டூட்டி புருட்டி – 50 கிராம்

ரவை – 1 கப்

சர்க்கரை – 2 கப்

வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்

முந்திரி, கிஸ்மிஸ் – சிறிதளவு

நெய் – 3 ஸ்பூன்

செய்முறை:
பேரிச்சம் பழ கேசரி
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கரைத்து கொள்ளவும். பிறகு அதனை கொதிக்க வேண்டும். 

கொதி வந்தவுடன் அதில் பேரிச்சம் பழம், முந்திரி, கிஸ்மிஸ், டூட்டி புருட்டி போன்ற வற்றை போட்டு பின்னர் அதில் ரவையை போட்டு கிளரவும். 
இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி ரவை நன்றாக வெந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் எசன்ஸ் ஊற்றி கிளரவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)