சூப்பரான பிரட் ரோல் செய்வது எப்படி?





சூப்பரான பிரட் ரோல் செய்வது எப்படி?

0
பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். 
சூப்பரான பிரட் ரோல் செய்வது எப்படி?
பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர். உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப் பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். 

சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். 
அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும். 

கார்போ ஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும் போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும். 

தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம். பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. 

பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப் படுகிறது. 

இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும். 

அதனால், மூச்சுக்குழாய் பாதித்து சளித் தொற்று ஏற்படலாம். மற்றவர்களைவிட குழந்தைகளுக்குச் சளித் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். 
எந்த வடிவத்தில் பிரெட் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதைக் கொண்டே கலோரி அளவு நிர்ணயிக்கப் படுகிறது. 

விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை !

உதாரணமாக, பீட்ஸா வடிவத்திலுள்ள பிரெட் வகைகளை உட்கொண்டால் ஒருநாளில் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மொத்த கலோரி அளவில் பாதிக்குமேல் உட்கொண்டதற்குச் சமம். 

பர்கரின் உள்ளே என்னென்ன ஸ்டஃப்டு செய்யப் பட்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கும். ஜாம் தடவினால், அதிலுள்ள கார்போ ஹைட்ரேட் அளவைப் பார்க்க வேண்டும். 

என்னென்ன தேவை? 

வெள்ளை அல்லது பிரவுன் பிரெட் - 1 பாக்கெட், 

மைதா - 50 கிராம், 

எண்ணெய் - பொரிப்பதற்கு 

ஃபில்லிங் செய்ய... 

பனீர் - 100 கிராம், 

வேக வைத்த உருளைக் கிழங்கு - 100 கிராம், 

சீஸ்- 100 கிராம், 

பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - 1. 

மசாலா செய்ய... 
சாட் மசாலா - 1 டீஸ்பூன், 

பிளாக் சால்ட் - கால் டீஸ்பூன், 

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், 

உப்பு- தேவைக்கேற்ப. 
குளிர் இரத்தப் பிராணி, வெப்ப இரத்தப் பிராணி என்றால் என்ன?
எப்படிச் செய்வது? 
பிரெட் ரோல்
ஃபில்லிங் செய்யக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும். மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை சப்பாத்திக் கட்டையில் வைத்து மெலிதாக உருட்டவும். 

உள்ளே ஃபில்லிங்கை வைத்து, மூடி, மைதா கரைசலால் ஒட்டவும். சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)