வெண்ணெய்யில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி?





வெண்ணெய்யில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி?

0
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்க்கு ஆசைப்படுவது உண்டு.
வெண்ணெய்யில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி?
சாக்லேட் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வயது முதிர்வை தடுக்கின்றது. சாக்லேட்டில் கார்லிக் அமிலம் அதிகமாக இருப்பதால் இதயத்திற்கு வலு சேர்கின்றன. 
இதனால் இதய நோய் வருவதற்கான பாதிக்குகள் குறையும். வயது அதிகரிக்கும் போது நரம்பின் செயல்பாடுகள் குறையும். இத்தகைய குறைப்பாடுகள் எளிதில் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. 

அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் பாதிக்கப்படுவதில் இருந்து காக்கின்றது. சரி வாங்க இனி சாக்லேட் கொண்டு வெண்ணெய்யில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி?  என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையானவை

மைதா மாவு - 120 கிராம்

பொடி செய்யாத சர்க்கரை - 120 கிராம்

கோகோ பவுடர் - 2 மேசைக் கரண்டி

முட்டை - 4

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கண்களில் தெரியும் அறிகுறிகள் ! 

செய்முறை : 
வெண்ணெய்யில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி?
முதலில் முட்டைகளையும், சர்க்கரையையும் பீங்கான் கிண்ணத்தில் போட்டு முட்டை யடிக்கும் கருவியினால் மிக நன்றாக அடிக்கவும். 

பின்னர் அடித்த முட்டை, சர்க்கரை கொழ கொழ வென்று நுரை போல் இருக்கும். மைதா மாவு, பேகிங் பவுடர், கோகோ பவுடர் இவற்றை சலிக்கவும். 
மாவையும் வெனிலா எசன்ஸையும் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையுடன் சேர்க்கவும். விரல் நுனிகளால் மைதா மாவை கலக்கவும். (மாவு பிசைவது போல் கலக்கக் கூடாது). 

நன்றாக நெய் தடவிய 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் போட்டு 400 டிகிரி F சூட்டில் சுமார் 10 இருந்து 15 நிமிடம் வரை பேக் செய்யவும். 

பேக் செய்தவுடன், சூடு சிறிது ஆறியவுடன் கேக்கை வெளியில் எடுத்து விடவும். கத்தியினால் குறுக்கு வாட்டில் கேக்கை சரிசமமாக வெட்டிக் கொள்ளவும். 

ஒரு தேக்கரண்டி பொடித்த சர்க்கரையை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கலக்கவும். பிறகு வெட்டிய கேக்கின் மேல் தெளிக்கவும். சாக்லெட் வெண்ணெய் ஐசிங்கை கேக்கின் மேல் தடவ வேண்டும்.

வெட்டிய கேக் இரண்டையும் நன்றாக ஒட்ட வேண்டும். கேக்கின் மேலும் பக்கவாட்டிலும் சாக்லெட் வெண்ணெய் ஐசிங்கை மழமழ வென்று தடவ வேண்டும். 

தடவியவுடன் விரும்பும் நிறத்தில் விரும்பும் விதத்தில் பூ போல செய்யும் அச்சினால் அழகுப் படுத்தலாம்.

குறிப்பு :

சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?

உங்களுக்கு பிடித்தமான கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.

பிறகு கேக் தேவையான பொருட்கள் கொண்ட உங்கள் பிடித்தமான கேக் வகைகள் செய்து சுவைக்கலாம். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)