சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி செய்வது எப்படி?





சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி செய்வது எப்படி?

0
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானுக்கு மீண்டும் செல்ல வேண்டும். 
சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி செய்வது எப்படி?
குண்டுவீச்சினால் பல பகுதிகள் அழிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் பட்டினி கிடந்த காலம் அது. மோமோபிக்கு அன்டோ என்கிற ஜப்பானிய தொழிலதிபர் தன்னுடைய தொழிலில் நஷ்டமடைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். 

அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டு வர நினைத்தார். கடும் குளிரில் ஒரு கப் பாரம்பரிய ரேமென் நூடுஸ்ஸுக்காக பசியோடு நீண்ட வரிசையில் காத்திருந்த ஜப்பானியர்களைக் கண்டதும் மோமோபிக்கு அன்டோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. 
அமெரிக்க அரசாங்கத்தால் ஜப்பானுக்கு வழங்கப்பட்ட கோதுமை உணவுகளை உண்பதற்கு மக்களை ஊக்குவிக்க ஜப்பானிய அரசாங்கம் வழி தேடுவதும் அன்டோவுக்குத் தெரிய வந்தது.

உடனே தன்னுடைய வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் மரக்குடிலுக்குச் சென்றவர் ஓர் ஆண்டு கழித்து இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயாரிப்பு முறையோடு வெளியே வந்தார். 

அவர் நினைத்தது போலவே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அதிவேகமாக பிரபலமடையத் தொடங்கியது. 

ஜப்பானின் நவீன பொருளாதாரத்துக்கு எழுச்சியை ஊட்டி, மாணவர்களுக்கும், பசியோடு இருந்த தொழிலாளர் களுக்குமான உணவாகவே மாறிவிட்டது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். 
மிக விரைவாக உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பலருடைய சுவைக்கும் பொருந்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கக் கூடிய உணவாக இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பார்க்கப்பட்டது.

தேவையானவை

நூடுல்ஸ் - ஒரு கப்

எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

வெங்காய விழுது - கால் கப்

தக்காளி விழுது - கால் கப்

தனியா தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

தயிர் - 4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு
புது கார் புது பங்களா கோடிக்கணக்கில் சுருட்டல் ஷோபியா !
செய்முறை :
சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி
முதலில் கொதிக்கும் நீரில் நூடுல்ஸ் சேர்த்து பாதி வெந்ததும் நீரை வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் அலசி நீர் வடிய விடவும். சிறுது எண்ணெய் எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் தாளிக்கவும்.பின்னர் வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.
மருந்து கடையில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி !
அதில் தூள் வகைகளை சேர்க்கவும்.பின்னர் தக்காளி விழுதும் தயிரும் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின்னர் சிக்கனை சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு வேக விடவும்.நீர் வற்றி கெட்டியாக சுருண்டு வந்ததும் நூடுல்ஸை சேர்த்து கிளறி பின்னர் இறக்கவும்.

சுவையான சிக்கன் நூடுல்ஸ் பிரியாணி தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)